சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாக ஒரு கிராம் ரூ. 7300 என்று நீடித்து வந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.
இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரண தங்கம் 58,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த 10ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 56,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 12 நாட்களில் சவரனுக்கு சுமார் ரூ. 2500 அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.