சென்னை: பெண்களின் ஆதாரமாக விளங்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவரன் விலை ரூ.55 ஆயிரம் இருந்து வந்த நிலையில், தற்போது  சரவன் தங்கம் விலை  ரூ.59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340 க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியதால்  ஏழை மற்றும் நடுத்தர பெண்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

 இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  கிராமிற்கு 10 20 என ஏக்கம் இறக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென 1500 வரை விலை ஏறியுள்ளது தங்கம் விலை ஏற்றம் காரணமாக வாங்கும் தன்மை பொது மக்களிடையே குறைந்து வருகிறது.  ஆனால், பலர் துணிந்து தங்கத்தில் முதலீடு செய்து வரும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.  மேலும்,  உலக நாடுகள் தங்கத்தில்  அதிக முதலீடு செய்கின்றனர்.  மேலும்   உலக நாடுகளை சூழ்ந்துள்ள போர் மேகம் காரணமாகவும், தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிக அளவில் இருந்து வருகிறது. முக்கியமாக காதுகுத்து கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளுக்கு தங்க நகைகளை உறவினர்களுக்கு அளிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.‌ தங்கம் அணிவதற்கு பயன்படுத்துவதை விட அதனை அடகு வைத்து படிப்பு செலவு மருத்துவ செலவு உள்ளிட்ட அவசர காலங்களில் அடகு வைத்து அந்த சூழலில் இருந்து மீள பல குடும்பங்களுக்கு தங்கம் பயனுள்ள ஒரு இன்வெஸ்ட்மென்ட் பொருளாக இருந்து வருகிறது.

பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வழக்கத்தை விட, தங்க நகைகள் விற்பனை வெகு ஜோராக இருக்கும். இந்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

 தமிழகத்தில் அக்டோபர் 18ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது.   கடந்த 19ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,20ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஆனால், தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.    இதனால், கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது.

அக்.,21ம் தேதி திங்கள் கிழமை, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று(அக்.,22) தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில், இன்று(அக்.,23) சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 10,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.