சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உக்ரைன் போர் தொடங்கியது முதல் முதல் தங்கம், கச்சா எண்ணை போன்றவைகளில் விலை விண்ணில் பறந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, 8 கிராமுகளை கொண்ட ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 காசு உயர்ந்து, ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமோ என அச்சம் நிலவி வருகிறது. பங்குசந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பங்குசந்தைகளும் வாரத்தின் முதலான இன்று வர்த்தக நாளான இன்று கடும் சரிவை கண்டுள்ளது. தங்கத்தின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது.
விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணை விலைகளும் உயரும் என அஞ்சப்படுகிறது. இது சாமானிய மக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.