டில்லி,
கேரளாவை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளதாக மாநில மந்திரி கேரள சட்ட சபையில் தெரிவித்தார்.
இயற்கை எழில் நிறைந்த கேரளா மாநிலம் தற்போது வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அமைச்சர் சந்திரசேகரன் கேரள சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
கேரளாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று  மத்திய அரசு அறிவித்து உள்ளதால்,   மத்திய அரசிடம் நிதி கேட்க முடிவு செய்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 34 சதவீதம் குறைவாக பெய்து, ஏமாற்றியதை தொடர்ந்து, கேரளா வறட்சி பாதித்த மாநிலமாக, அம்மாநில சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் நீடிக்கும். இந்த 4 மாதங்களில் சராசரியாக 2,039.7 மி.மீ. வரை மழை பெய்யும். ஆனால், இவ்வருடம் 1,353.3 மி.மீ. மழையே பெய்துள்ளது. இது வழக்கமான பருவமழையில் 34 % குறைவாகும்.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததை தொடர்ந்து, கேரளாவில் முல்லைப் பெரியாறு, இடுக்கி உட்பட பெரும்பா லான அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது. இதனால், குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், கேரளாவை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என மாநில பேரிடர் நிவாரண மையம், கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து கேரள சட்டப்பேரவையில் இதுகுறித்த விவாதம் நடந்தது.
அப்போது வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் பேசியது: தென்மேற்கு பருவமழை இவ்வருடம் 34 சதவீதம் குறைந்துள்ளதால் அணைகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்துள்ளது. தற்போது அணைகளில் சராசரியை விட 22 சதவீதம் தண்ணீர் குறைவாக உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் முழுவதும் மழை பெய்தாலும், இந்த குறைவை ஈடுகட்ட முடியாது.
kerala-1
எனவே, வரும் நாட்களில் கடும் குடிநீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள சட்டசபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேசுகையில், மாநில முழுவதும் வறட்சி நிலவுகிறது. பருவமழை குறைவாக பெய்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்–மந்திரி பினராயி விஜயன் சந்தித்து நிதி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து மாநில வருவாய் துறை மந்திரி சந்திரசேகரன் பேசியதாவது:–
தென் மேற்கு பருவமழை 34 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழையும் கைகொடுக்க வில்லை. இதனால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன், முதல்–மந்திரி அவசர ஆலோசனை நடத்தினார். தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
மழை இல்லாதால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளதால், விவசாய கடனை செலுத்த காலக்கெடு நீடிக்கப்பட்டு உள்ளது.எனவே கேரளா, வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து கூடுதல் நிதி கேட்கப்படும் என்றார்.
மாவட்டங்களில் நிலவு நிலையை கண்டறிய முதல்-மந்திரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்துவார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் பணிகளை மாநில தலைமை செயலாளரும் ஆய்வுசெய்வார் என்றும் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார்.