
ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தனது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ரஜினி வீடியோ கான்பிரசிங் மூலம் பேசினார்.
அப்போது அவர், “ரசிகர்களிடம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருந்தால் போதும். மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் ஏதேனும் சண்டை ஏற்படுகிறதா என சிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபடுங்கள்” என்று ரஜினி அறிவுரை வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel