கோவா:
கோவா மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவை தவிர ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கோவா மாநிலத்தில் போட்டியிடுகின்றன.
பாஜகவை சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பா.ஜ.க., வாய்ப்பு அளிக்காததால், பனாஜி தொகுதியில் அவர் தனித்து களம் இறங்கியுள்ளார்.
கோவா மாநிலத்தில் 11 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஆயிரத்து 722 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கோவாவில், பாதுகாப்பு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.