இந்தி நடிகை பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் நடிகை ஆவார்.
அண்மையில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், கோவா மாநிலத்துக்கு கணவருடன் தேனிலவு கொண்டாட சென்றிருந்தார்.
அப்போது கணவர் சாம் பாம்பே, தன்னை அடித்து உதைத்தாக பூனம் பாண்டே போலீசில் புகார் அளித்தார், இதனால் சாம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பூனம் பாண்டே மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கோவா மாநிலம் கன்கோனா கிராமத்தில் சபோலி அணைக்கட்டு உள்ளது.
அனுமதி இல்லாமல் இந்த அணை உள்ள பகுதியில் பூனம் பாண்டேயின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இது ஆபாச படத்தின் ஷுட்டிங் என்று தெரிகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது குறித்து கோவா மாநில பார்வர்ட் பிளாக் கட்சியின் மகளிர் பிரிவு போலீசில் புகார் அளித்தது.
“கோவா மாநிலத்தின் பெயரை கெடுக்கும் வகையில் கன்கோனா கிராமத்து அணையில் பூனம் ஆபாச படத்தில் நடித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
– பா. பாரதி