மும்பை

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.    கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை முடிந்து பிப்ரவர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வந்தார்.  அன்று நடைபெற்ற கோவா சட்டப்பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையை அளித்தார்.

மீண்டும் நோய்வாய்ப்பட்ட அவர் கடந்த மாதம் 25ஆம் தேதி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.     அங்கிருந்து மார்ச் 1 ஆம் தேதி விடு திரும்பினார்.   அதன் பிறகு பூரண ஓய்வில் இருந்தார்.   அதன் பின் மருத்துவ பரிசோதனைக்காக மும்பை சென்ற பாரிக்கர் தேவைப்பட்டால் வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வார் என அரசு அறிவித்தது.

பரிசோதனை முடிந்த பின் அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.   அதனால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.   மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக அவர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.