சென்னை
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவின் மனைவி நேகா ஞானவேல் நடிகைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டி உள்ளார்.
தமிழ் தயாரிப்பாளர்களில் தற்போது பிரபலாமாக உள்ளவர் ஞானவேல் ராஜா. இவருடைய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் இவரைக் குறித்து எழுந்த சர்ச்சைகள் தற்போது ஓய்ந்துள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி உள்ளது. இவருடைய மனைவியும் உடை வடிவமைப்பாளருமான நேகா ஞானவேல் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகைகளை கடுமையாக திட்டி உள்ளார்.
நேகா தனது டிவிட்டர் பக்கத்தில், “தற்போதுள்ள நடிகைகள் இன்னொருவர் குடும்பத்தை கெடுப்பதில் முதலிடம் வசிக்கின்றனர். அனைவரும் இன்னொருத்தி கணவரின் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள எப்போதும் தயாராக உள்ளனர். எந்த ஒரு ஆண்மகனும் குழந்தை அல்ல.
அவர்களின் ஒரே பிரச்னை மனைவியைத் தவிர உள்ள மற்ற பெண்கள் தான். ஆண்கள் இடம் கொடுப்பதால்தான் இந்த நடிகைகள் இன்னொருவரின் குடும்ப மகிழ்ச்சியை குலைத்து விட்டு அதை இல்லை என மறுத்து விடுகின்றனர். பெண்கள் இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் விடுவதால் இந்த நடிகைகளுக்கு சிறிதும் பயமில்லை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது இந்த நடிகைகளின் விஷயத்தில் சரியாக உள்ளது.” என பதிந்திருந்தார்.
இந்த டிவிட்டர் பதிவு திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியது. ஞானவேல் ராஜாவுக்கும் நடிகைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்த பதிவு இது என பேச்சு அடிபட ஆரம்பித்தது. முன்பு “சுசி லீக்ஸ்” என்னும் பெயரில் பாடகி சுசித்ரா வெளியிட்ட திரையுலக அந்தரங்கத் தகவல் போல இவரும் வெளியிடுவார் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால் தனது பதிவை தற்போது நேகா அழித்து விட்டார். அவருடைய புதிய பதிவில், ”இது போல வேசித்தனம் செய்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கவே இவ்வாறு பதிவு செய்தேன். மீண்டும் திருமணமான ஆண்கள் பின்னால் அலைந்து குடும்பங்களை இவர்கள் கலைத்தால் முழு உண்மையையும் வெளியிடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஒட்டி அவர் குறிப்பிட்டது நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் என்பது தெரிய வந்துள்ளது.