டில்லி:
2015ம் ஆண்டில் சுற்றுசூழல் மாசு காரணமாக உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் 25 லட்சம் பேர் இறந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதிகபட்சமான இறப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
தி லான்சட் என்ற சர்வதேச இதழில், ‘‘ 2015ம் ஆண்டில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் ஆகிய நோய் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமானோர் சுற்றுசூழல் மாசு பாதிப்பில் இறந்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 லட்சம் பேர் காற்று மாசு காரணமாகவும், 6.4 லட்சம் பேர் நீர் மாசு காரணமாகவும் இறந்துள்ளனர். சுற்றுசூழல் மாசு காரணமாக ஏற்படும் நோய்களின் பாதிப்பு குறிப்பாக சிறு£ன்மையினர் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவு மக்கள் மத்தியில் தான் அதிகமாக இருக்கிறது. இதில் 70 சதவீத தொற்று நோய் அல்லாத மாரடைப்பு, சுவாச கோளாறுகளால் ஏற்பட்டுள்ளது.