புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் தொலைக்காட்சிகளில் பொய்யான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளைப் பற்றி தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் தொலைக்காட்சிகளில் பொய்யான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விவசாயிகளின் கடின உழைப்பிற்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட விவசாயிகளை லத்தியை கொண்டு அடிப்பதும், கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைபதும் விவசாயிகளை அவமதிப்பதற்கு சமமாகும். அனைவரும் தங்களுடைய இடத்திலிருந்து இறங்கி விவசாயிகளின் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அப்போது அந்த வலி புரியும், விவசாயிகளுக்கு தற்போது நீதி வழங்குவதன் மூலம் நாம் அவர்களுடைய கடனை அடைக்க முடியும், விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமையை வழங்குங்கள் என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் விவசாய மசோதாவை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி