கிறிஸ்ட் சர்ச்

நியுஜிலாந்து மசூதி துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியின் தாய் தன் மகனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

பொதுவாக தாய்மை என்றாலே ஒரு தெய்வம் தேவதை என கூறுவது வழக்கம்.   எத்தகைய ஒரு கொடுமையான மகனையும் மன்னிக்கும் குணம் கொண்டவள் தாய் என்பதால் இவ்வாறு கூறி வருகின்றனர்.   பொதுவாகவே துர் செயலில் ஈடுபடும் மகனின் தாய் தனது மகன் கூட உள்ளவர்களால் கெட்டு போய் விட்டான் என கூறுவது சகஜம்

அப்படி இருக்க ஒரு தாயே தன் மகனை வெறுத்தாள் என்றால் அந்த மகன் எத்தகைய கொடூர செயல்களை செய்திருப்பான் என யாராலும் கற்பனையும் செய்ய முடியாது.   ஆனால் உலகில் அப்படிப்பட்ட தாய்மார்களும் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

நியுஜிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் ஒரு தீவிரவாதி இரு மசூதிகளில் துப்பாக்கி சூடு நடத்தினான்.   அதில் சுமார் 50 பேர் கொல்லப்ப்பட்டனர்   இந்த தாகுகுதலுக்கு உலகெங்கும் பலர் கண்டனம்,தெரிவித்து வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த தீவிரவாதியின் தாயார், “ என் மகன் செய்தது மிகவும் கொடூர்மான செயல்.   இது போன்ற தீவிரவாதிகளுக்கு அளிப்பதைப் போல் எனது மகனுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.