மும்பை

மும்பையில் நமாஸ் செய்ய மறுத்தற்காக ஒரு சிறுமி உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ளது அண்டோப் ஹில்ஸ் என்னும் பகுதி.   இக்கு வசிந்து வந்த 15 வயது சிறுமியை அவரது உறவினர்கள் மும்பை சயான் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அந்த சிறுமி ஏற்கனவே இறந்திருந்தார்.   அவரது உடலில் அடிபட்ட அடையாளங்களும் காயங்களும் இருந்தன.   உறவினர்கள் அந்த சிறுமி வழுக்கி விழுந்ததாக சொல்லி உள்ளனர்.

இதை நம்பாத மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.   உறவினர்கள் உளறியதால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறை ஒவ்வொருவரையும் தனித் தனியே விசாரித்தது.  அப்போது உறாவினர்கள், “நாங்கள் இஸ்லாமியர்கள்.  எனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமாஸ் செய்யவேண்டும் என அந்த சிறுமியிடம் சொன்னோம்.  எவ்வளவு வற்புறுத்தியும் அவள் கேட்காததால் அடித்தோம்.  அதன் பிறகும் அவள் ஒப்புக் கொள்ளாததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” என ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.  அதனால் அவர் தந்தை அந்த சிறுமியை உறவினர்கள் கண்காணிப்பில் விட்டுள்ளார்.  அந்த தந்தை பணிக்கு சென்ற பின் இந்த கொலை நடந்துள்ளது.   மகளை இழந்த தந்தையின் கதறல் அனைவரின் உள்ளத்தையும் நெகிழச் செய்துள்ளது.