டில்லி
பிரதமர் மோடியைத் தொலைக்காட்சியில் பணி புரிகிறீர்களா என ஒரு சிறுமி கேட்ட நிகழ்வு பலரையும் நகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் விளம்பரங்களிலும் பிரதமர் மோடி வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆயினும் அனைத்து விளம்பரங்கள், நிகழ்வுகளிலும் மோடி வருவது குறையாமல் உள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் அவர் 722 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றி உள்ளார்
நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஜியா பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த இவர் நாடாளுமன்றத்தில் மோடியைச் சந்தித்த போது தனது மனைவி மற்றும் 6 வயது மகள் அஹானாவையும் அழைத்து வந்துள்ளார்.
பிரதமர் மோடி அஹானாவிடம் “உனக்கு நான் யார் எனத் தெரியுமா?” எனக் கேட்டுள்ளார். அஹானா அவரிடம் “தெரியும். நீங்கள் மோடிதானே, நீங்கள் தொலைக்காட்சியில் தானே பணி புரிகிறீர்கள்?” எனக் கேட்டுள்ளாள். இந்த நிகழ்வு அனைவருக்கும் நகைப்பை அளித்துள்ளது. பிரதமர் மோடியும் இதைக் கேட்டு சிரித்து விட்டு சிறுமிக்கு இனிப்புகள் வழங்கி உள்ளார்.
[youtube-feed feed=1]