நாட்டிலேயே மிக அதிக செலவில் எடுக்கப்பட்டதாக பெருமிதத்துடன் சொல்லப்படும் படம், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் சில நாட்களிலேயே சில நூறு கோடி ரூபாய்களை வசூல் செய்துவிட்டதாகவும் தயாரிப்பு தரப்பு பெருமைப்படுகிறது.

இந்த படத்தின் தமிழக மற்றும் உலக (எப்.எம்.எஸ்.) உரிமையை ஆங்கில ஓர் எழுத்து நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளது.  இந்த நிறுவனத்தின் அதிபர், சோழ அரசரின் பெயர் கொண்ட இளைஞர்.

திரைத்துறைக்கு புதியவரான இவர்  எப்படி இவ்வளவு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கினார் என்று திரைத்துறையினர் பிரமித்து நிற்கிறார்கள்.

விசாரித்தால், அந்த  அதிபர், மாஜி முக்கிய பிரமுகரான மூன்றெழுத்து இனிஷியலாரின் பினாமி என்கிறார்கள்.

“எங்கள் தரப்பு ஆட்களை வளைத்துப்பிடிக்கிறார்கள் வருமான மற்றும் இதர மத்திய துறை அதிகாரிகள். ஆனால் மாஜியார் டீலிங்குகள் எதையுமே கண்டுகொள்வதில்லையே..” என்று பொருமுகிறார்கள்  எதிர்தரப்பு ஆட்கள்.