சென்னை

சென்னை ஆவடியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசு தமிழகத்தில் போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு உட்பட்ட கடைகளில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடைகளில் மறைத்து வைக்கப்பட்ட குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடைகள் தற்போது மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.  மேலும் இவ்வாறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.