டெல்லி:  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர்  பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில் பேசிய பிரதமர் மோ, கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத் என்று நெகிழ்சியுடன்  பேசியதுடன்,  உயர்ந்த பதவிகள் வரும், அதிகாரம் வரும். இதையெல்லாம் எப்படிக் கையாளுவது என்பதை நாம் குலாம் நபி ஆசாத்திடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று புகழாரம் சூட்டினார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் இன்றோடு முடிவடைகிறது.  மேலும்,  வருகிற ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வயலார் ரவி, இந்திய முஸ்லிம் லீக் அப்துல் வகாப் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராகேஷ் ஆகியோரின் டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்காலம் முடிவடைகிறது. இவர்களுக்கு  பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி ராஜ்யசபாவில் இனறு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ராஜ்யசபா துணைத்தலைவர் உள்பட பல கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு புகழாரம் சூட்டினர்.  குலாம் நபி ஆசாத் குறித்து பிரதமர் மோடி கண்ணீர் மல்க  நெகிழ்ச்சியுடன் பேசினார். இது சபையில் அமைதியை உருவாக்கியது.

பிரதமர் மோடி பேசும்போது,  “உயர்ந்த பதவிகள் வரும், அதிகாரம் வரும். ஆனால், இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து  நாம் குலாம் நபி ஆசாத்திடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.  குலாம் நபி ஆசாத் ஒரு ஆகச் சிறந்த மனிதர். அவர் வகிக்காத பதவிகள் இல்லை.  அவரை  நான் சிறந்த நண்பராகத்தான் கருதுகிறேன். அவருக்கு ஒருபோதும் கர்வம் இருந்தது கிடையாது என்று புகழ்ந்தார்.

தொடர்ந்து பேசியவர், தான் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வு ஒன்றை நினைவுகூறுவதாக கூறிய மோடி,  அப்போது,  “குஜராத்தைச் சேர்த்த சிலர் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்டனர். அப்போது,  தாக்குதலில் சிக்கியவர்களை அவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களைப் போல எண்ணி தவிய,  ஆசாத் ஜி-யின் முயற்சிகளையும், பிரணாப் முகர்ஜியின் முயற்சிகளையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

” குலாம் நபி ஆசாத்தை பல ஆண்டுகாலமாக தெரியும், நானும், அவரும் ஒன்றான மாநில முதல்வராக இருந்துள்ளோம், நான் முதல்வர் பதவி ஏற்கும் முன்பே குலாம் நபி ஆசாத்ஜியை தெரியும் என்றவர், அப்போதே இருவரும் பேசியுள்ளோம். அவர் அரசியலில் தீவிர ஈடுபட்டிருந்ததுடன், தோட்டக்கலை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்” என்றார்.

குலாம் நபி -ஜிக்குப் பதிலாக மற்றொருவர் இந்த பதவிக்கு (எதிர்க்கட்சி தலைவர்) வந்தாலும் அவரின் இடத்தை நிரப்ப முடியாது என்று பேசிய மோடி, .குலாம்ஜி,  தன் கட்சியைப் பற்றி மட்டுமல்ல, இந்த நாடு குறித்தும், இந்த அவைக் குறித்தும் பெரும் அக்கறை கொண்டிருந்தார்,  “எதிர்க்கட்சித் தலைவராக, கட்சி அரசியலில் ஈடுபடுவது எளிதானது, ஆனால் குலாம் நபி ஆசாத் ஜி இதற்கு மேலாக உயர்ந்தார், எப்போதும் நாட்டின் செழிப்புக்கு முன்னுரிமை அளித்தார்.” தொற்றுநோய்களின் போது, ​​ஒரு தேசமாக நெருக்கடியை எதிர்த்துப் போராடுங்கள் என்று முன்மொழிந்தார் என்று நினைவு கூர்ந்த பிரதமர்,  `நீங்கள் இந்த அவைக்குத் திரும்ப வேண்டும். காங்கிரஸ் உங்களைத் திரும்ப அழைத்து வரவில்லை என்றால், நாங்கள் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றவர், எனது கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கும் என்றார்.

நாட்டிற்காக அவர் செய்த பணிக்கு நன்றி தெரிவித்ததோடு, ஒரு “நண்பராக” தனது எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அரசியல் விஷயங்களில் அவர் அளிக்கும் பரிந்துரைகளை “எப்போதும் மதிப்பிடுவேன்” என்றும்  கூறியவர். “குலாம் நபி ஆசாத் இந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர், அது எப்போதும் அவரைச் செய்ய வைக்கும். அவர் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் அவர் மதிப்பு சேர்க்கும் என்றும் வாழ்த்தி குலாம் நபி ஆசாத்துக்கு தனது உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை உரையை முடித்தார்.

மாநிலங்களவையில் வாழ்த்திய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து தனது கடைசி உரையை வழங்கிய குலாம் நபி ஆசாத், “இந்தியாவில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்படவேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் குறித்து கேள்விப்படும் போது, நான் இந்திய முஸ்லீம் என்பதனை நினைத்து பெருமை கொள்வேன்” என்றார்