குவாலியர்

குவாலியர் மருத்துவமனையில் தகவல்கள் அளிக்க விடாமல் ஒரு பேய் தடுப்பதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியர் பகுதியில் கஜ்ரா ராஜா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.   கடந்த சில வருடங்களாக இங்கு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.  அதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்தது  இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்த விவரங்களைக் கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்தார்.

அதற்கு மருத்துவமனை அதிகாரிகள் இந்த தகவல்கள் உள்ள கோப்புக்கள் சிபிஐ வசம் உள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் கோப்புக்கள் உள்ள அறையைச் சீல் வைத்துள்ளதாகவும் முதலில் தெரிவித்துள்ளனர்.   மேலும் மேலும் இதே தகவல்களைக் கோரவும் இந்த கோப்புகள் எல்லாம் ஒரு எழுத்தர் வைத்திருந்ததாகவும் அவரை சிபி ஐ கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதே கோரிக்கை மூன்றாம் முறை எழுப்பப்பட்டது.  அப்போது அந்த எழுத்தர் கோப்புகள் உள்ள அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய பேய் அங்கு உலாவி அறைக்குள் யாரையும் நுழைய விடாமல் தடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   தகவல்களைத் தர பேய் தடுப்பதாகச் சாக்கு கூறுவது புதுமையாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.