பெர்லின்:
கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஆல்கஹால் நுகர்வு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Destatis) தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை கோரோனா பரவல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் ஈஸ்டர் திருநாள் நெருங்கி வருவதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வலியுறுத்தியுள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஈஸ்டருக்கு முன்னதாக 5 நாட்கள் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஆல்கஹால் நுகர்வு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Destatis) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி தனிநபர் நுகர்வு கடந்த ஆண்டு 0.9 சதவீதம் குறைந்துள்ளது என்றும், குறிப்பாக ஒயின் நுகர்வு ஆண்டுக்கு 2.1 சதவீதம் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கையில் மிகவும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆண்டுக்கு ஆண்டு 5.4 சதவீதம் குறைந்து 86.9 லிட்டராக இருந்தது, இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான குறைவு என்று டெஸ்டாடிஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொற்றுநோயால் பீர் விற்பனை பாதிக்கப்பட்டது. முந்தைய ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஜெர்மன் மதுபானம் மற்றும் பீர் கிடங்குகள் 5.5 சதவீதம் குறைவாக பீர் விற்பனை செய்ததாக டெஸ்டாடிஸ் தெரிவித்துள்ளது.