மிருகங்களைக் கொல்லுங்கள்.. அதிர்ந்துபோன வன உயிரியல் பூங்கா
ஒவ்வொரு கண்டமாக உலா வரும் கொரோனா பூதம், மனிதர்களைத் தின்றதோடு, நின்று விடாமல் விலங்குகளுக்கும் குறி வைத்துள்ளது.
ஊரடங்கு காரணமாக எல்லா நாடுகளிலும் மிருக காட்சி சாலைகள் மூடப்பட்டு விட்டன.
பார்வையாளர் இல்லாததால் வருமானம் இல்லை.
அரசாங்கத்திடமும் நிதிப் பற்றாக்குறை.
ஆனாலும் விலங்குகள் பசியால் அழுகின்றனவே.
என்ன செய்வது?
ஜெர்மன் நாட்டில் ஹம்பர்க் நகர் அருகே உள்ள மிருக காட்சி சாலையில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 700 விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
’’மாமிச பாக்கி’’ வைத்திருப்பதால், அங்கு உணவு சப்ளை செய்பவர் கொஞ்ச நாட்களாய் வரவில்லை.
உள்ளூர் வியாபாரிகளிடம், இறைச்சி வாங்க மிருக காட்சி அதிகாரிகளிடம் காசு இல்லை.
‘ சில மிருகங்களைக் கொன்று, அதனை மற்ற மிருகங்களுக்கு உணவாகக் கொடுங்கள்’’ என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு.
’’நாமே வளர்த்த விலங்குகளை நாமே கொல்வதா?’’ எனக் கண்ணீர் சிந்திய படி, கத்தி எடுத்துள்ளனர்,மிருக காட்சி சாலை ஊழியர்கள்.
– ஏழுமலை வெங்கடேசன்