டில்லி,
க்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், தனது இண்டர்நெட் சேவையின் வேகத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது.
airtel-v-fiber
ஜியோ வருகையால் மற்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஆட்டம் கண்டுள்ளன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஜியோவை நாடியா ஓடுகிறார்கள். இதனால் ஏர்டெல், வோடாபோன், ஏர்செல், பிஎஸ்என்எல், ஐடியோ டெலிகாம் கம்பெனிகிள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இதை சரிகட்ட பிஎஸ்என்எல் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் அதிரடி ஆபர்களை அறிவித்து தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள பெரும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக  டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
airtel
தற்போது ஏர்டெல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் 18 எம்.பி.பி.எஸ் இன்டர்நெட் வேகத்தை வழங்கி வருகிறது. விரைவில் இதனை 100 எம்.பி.பி.எஸ் ஆக உயர்த்தப்போவதாக இன்று அறிவித்துள்ளது.
வி-பைபர் என்னும் புதிய வகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரிக்கும் ஏர்டெல் சென்னை தொடங்கி இந்தியா முழுவதும் சுமார் 87 நகரங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த உள்ளது.
புதிதாக ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்பு எடுப்பவர்கள் 3 மாத காலம் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்து தங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் பிடிக்கவில்லை என்றால் ஒரு மாதத்திற்குள் மோடத்திற்கான விலை திரும்ப அளிக்கப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பவர்கள் இந்த சேவை வேண்டுமென்றால் புதிதாக மோடம் வாங்க வேண்டுமென்றும் ஏர்டெல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.