மும்பை
நிரவ் மோடியின் நிறுவனமான கீதாஞ்சலி குழுமத்தின் துணைத் தலைவர் விபுல் சிடாலியாவை நேற்று மும்பை விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளரான நிரவ் மோடி மற்றும் அவர் உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.12.636 கோடி ஊழல் செய்துள்ளது தெரிந்ததே. அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களது நிறுவனங்கள் தற்போது அமுலாக்கத் துறையின் சோதனையில் உள்ளன.
இந்நிலையில் கீதாஞ்சலி குழுமத்தின் துணைத் தலைவர் விபுல் சிடாலியாவை மும்பை விமான நிலயத்தில் சிபிஐ கைது செய்துள்ளது. கைதுக்குப் பின் அவர் பாந்த்ரா – குர்லா வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது விபுல் தமக்க் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் ரூ. 12636 கோடி ஊழலைப் பற்றி எதுவும் தெரியாது எனக் கூறி உள்ளார்.
தற்போது பங்குச் சந்தையில் கீதாஞ்சலி குழுமப் பங்குகள் விலை குறைந்துள்ளன. நேற்று விபுல் கைது செய்ததை தொடர்ந்து பங்குகளின் விலை மேலும் 5% குறைந்துள்ளது.