ந்திமொழி  இலக்கிய எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் முதன்முதலாக புக்கர் பரிசு பெறுவது இதுதான் என்பது பெருமைக்குரியது.

 கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’, இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலுக்காக  #2022இன்டர்நேஷனல் புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கீதாஞ்சலி ஸ்ரீ புக்கர் பரிசை வென்றவர் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என புக்கர் நிறுவனம் அறிவித்து உள்ளது.

உலகத்திலேயே இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது புக்கர் பரிசு. இந்த பரிசு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நாவலான ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘டூம் ஆஃப் சாண்ட்’க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது. 1947ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவிணையின் போது தான் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசியிருக்கிறார்.

80 வயது நாயகியை சுற்றி எழுப்பப்பட்ட  இந்த கதை, இந்தி மொழியில் எழுதப்பட்டது. பின்னர், இது  ஆங்கிலத்தில் ராக்வெல் என்பவரால்  மொழி பெயர்க்கப்பட்டது. இந்த புத்தகமே இந்த ஆண்டுக்கான புக்கரி பரிசை தட்டிச்சென்றுள்ளது. புக்கர் பரிசுக்கான இறுதிப் போட்டியில் போலந்து நோபல் அறிஞர் ஓல்கா டோக்கர்ஜுக், அர்ஜென்டினாவின் க்ளாடியா ஃபினேரியோ, கொரியாவின் போரா சுங் ஆகியோரின் புத்தகங்கள் இருந்த நிலையில், இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும். அந்த புத்தகமே புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, அந்த புத்தகத்தை எழுதிய இந்திய எழுத்தாளர் அதுவும் இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கர் விருது கிடைத்துள்ளது.

இதற்கான பரிசுத் தொகையான 50,000 பவுண்ட் கிடைக்கும். இது கீதாஞ்சலிஸ்ரீ மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பாளர் ஆகிய  இருவராலும் பிரித்துக் கொள்ளப்படும்.

கீதாஞ்சலி ஸ்ரீ கடந்த 30 ஆண்டுகளாக  இலக்கிய துறையில் தீவிரமாக இயங்கிவருபவர். அவரது முதல் புத்தகமான ‘மாய்’ (Mai), ஹமாரா ஷாஹர் அஸ் பராஸ் (Hamara Shahar Us Baras) புத்தகங்கள் 1990களில் வெளியாகின. அதன்பின்னர், ‘திரோஹித்’, ‘காளி ஜகா’ (khali jagah) நூல்களும் வெளியாகின. நாவல்கள் மட்டுமல்லால் பல்வேறு சிறுகதைகளையும் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதியுள்ளார். அவருடைய ‘மாய்’ புத்தகம் ‘க்ராஸ்வார்ட்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவருடைய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கீதாஞ்சலிஸ்ரீ,  “புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதனை வெல்வேன் என நினைக்கவில்லை,”. “இது பெரிய அங்கீகாரம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பணிவாகவும் உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “எனக்கும் இந்தப் புத்தகத்துக்கும் பின்னால், இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளின் வளமான மற்றும் செழிப்பான இலக்கிய பாரம்பரியம் உள்ளது. இந்த மொழிகளில் உள்ள சில சிறந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்வதன் மூலம் உலக இலக்கியம் வளமடையும்” என தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். உபேந்திரநாத் அஷ்க்கின் ‘கீர்த்தி தீவர்’ நாவல் குறித்த ஆய்வுக்காக பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார். எழுத்தாளர்கள் உபேந்திரநாத் அஷ்க், கதீஜா மஸ்தூர், பீஷ்மா சாஹ்னி, உஷா பிரியம்வதா, கிருஷ்ணா சோப்தி ஆகியோரின் புத்தகங்களை இவர் மொழிபெயர்த்துள்ளார்.