மகாவீர் பரிநிர்வான நாளை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி சென்னை மாநகராட்சி இறைச்சி கூடங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ஆடுதொட்டிகள் தவிர ஜைன வழிபாட்டு தலங்களுக்கு 100 மீட்டர் சுற்றளவில் உள்ள இறைச்சி கடைகளும் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை (அக். 31) தீபாவளி பண்டிகையை புத்தாடை, இனிப்பு, பட்டாசுடன் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராகி வருகின்றனர்.

இந்த ஆண்டு வழக்கம் போல் தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவ. 1ம் தேதி வெள்ளிக்கிழமை சமணர்களின் முக்கிய தினமான மகாவீர் நிர்வான் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி இறைச்சி கூடங்கள் அன்றைய தினம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.