கலிபோர்னியா: கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க கலிபோர்னியா மாகாணம் தனித்து செயல்பட அறிவித்து இருக்கிறார் ஆளுநர் கெவின் நியூசோம்.
உலக நாடுகளில் சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக இருப்பது அமெரிக்காதான். கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
மற்ற மாகாணங்களை விட, நியூயார்க் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது.
இந் நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க கலிபோர்னியா மாகாணத்தை தனி தேசமாக அறிவித்து இருக்கிறார் ஆளுநர் கெவின் நியூசோம். தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில் அவர் இதனை அறிவித்து உள்ளார்.
அதிபர் டிரம்பின் அரசானது மக்களை கொரோனாவில் இருந்து காக்க தவறிவிட்டது. கலிபோர்னியாவுக்கு தேவையான அனைத்து மருத்துவ பொருட்களையும் வாங்குவோம். இதில் முன்னேற்றம் கண்டால் மற்ற மாநிலங்களுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் என்றார்.