1987ம் ஆண்டு நடிகையானவர் கௌதமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தொழில் அதிபர் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு சுப்புலட்சுமி என்கிற மகள் இருக்கிறார். திருமணமான மறு ஆண்டே விவாகரத்து பெற்றார் கௌதமி.
அதன் பிறகு அவர் உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார். சுமார் 13 ஆண்டுகள் கமலுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்.
கமலுடன் இருந்த காலத்திலும் கௌதமி படங்களில் நடிக்கவில்லை. அதற்கு தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் கௌதமி.
தனியாளாக இருந்து மகளை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற கவலையில் அவர் நடிக்க வரவில்லையாம். மகளுக்காக பிற தொழில்களில் கவனம் செலுத்தி வந்தாராம். தற்போது மகள் வளர்ந்துவிட்டதால் படங்கள், அரசியல் என்று துணிச்சலாக ஒரு முடிவு எடுத்து செயல்பட முடிகிறது என்கிறார் கௌதமி.