
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல வித மர்மங்கள், கேள்விகள் இருப்பதாவும், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார். இது குறித்த கடந்த டிசம்பர் 9ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி ஓர் கடிதம் வரவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து மர்மங்களை விலக்க கோரி, பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடித்ததை கவுதமி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகங்களை விளக்க வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். இதை எனது என்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தேன். ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்கள் அனுபவிக்கும் வேதனைகள், விடை தெரியாத பதில்கள் ஆகியவை குறித்து விளக்கக் கோரியிருந்தேன்.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த மக்களின் கேள்விகளுக்கு எந்தவொரு பதில் அளிக்கப்படவில்லை, இது தமிழக மக்களை வேதனைப்படுத்துகிறது. அவரது இறப்பில் இருக்கும் மர்மங்களுக்கு விடை கிடைக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கவுதமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]