டில்லி
ஐபிஎல் 2018 : டில்லி டேர் டெவில்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் ராஜினாமா செய்துள்ளார்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2018 போட்டிகளில் டில்லி டேர் டெவில்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.
இந்த அணியின் தலைவராக கவுதம் கம்பீர் உள்ளார்.
தொடர்ந்து டில்லி அணி தோல்விகளை சந்தித்து வருகிறது
இதையொட்டி டில்லி அணியின் ரசிகர்கள் மிகவும் துயரடைந்துள்ளனர்.
தோல்விகளுக்கு பொறுப்பேற்று கவுதம் கம்பீர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவருக்கு பதில் சென்ற போட்டியில் நன்கு விளையாடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைவர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.