உத்திரபிரதேசம்:
ஈவ் டீசிங் கொடுமையால் அமெரிக்காவில் படிக்கும் பெண் பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுதிக்ஷா பாட்டி உத்திரபிரதேசத்தின் தாத்ரியில் அமைந்துள்ள புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஜிதேந்திர பாட்டியின் மகள், இவர் தேயிலை விற்பனையாளராக உள்ளார், மேலும் அவர் படிப்பில் சிறந்து விளங்கியதால் அமெரிக்காவின் பாக்ஸன் கல்லூரியில் உதவித்தொகை பெற்று படித்து வந்தார்.
கடந்த திங்கள்கிழமை சுதிக்ஷா பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சிலர் அவரை ஈவ் டீசிங் செய்துள்ளனர். மேலும் அவரது பைக்கை துரத்தி கொண்டே வந்துள்ளனர். இதனால் பயந்த சுதிஷா பைக்கில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணாமாக ஜூன் மாதம் சுதிக்ஷா தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அவர் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப செல்ல முடிவு செய்திருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் அமெரிக்க சென்ற சுதிக்ஷா, பாக்ஸன் கல்லூரியில் பட்டம் பெற்றதுடன், இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகது.