பெங்களூரு:
கன்னட மூத்த பெண் பத்திரிகையாளர், கவுரி லங்கேஷை படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் நெருங்கிவிட்டதாகவும் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
கர்நாடக மாநில தலைநகர், பெங்களூருவில் சமீபத்தில், மூத்த பெண் பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ், அவர் வீட்டில், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை பிடிக்க, மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, போலீஸ், ஐ.ஜி., – பி.கே.சிங் தலைவராக உள்ளார். கொலையாளி பற்றிய தகவல் அளிப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டி, கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் அவர்களை நெருங்கிவிட்டனர். அவர்கள், விரைவில், பிடிபடுவர். ஆனாலும் தற்போது, அவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க இயலாது” என்றார்.