புதுடெல்லி:
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள சீனியர் வீரர்களுக்கு 60,000 ரூபாயும், 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 25,000 ரூபாயும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இது குறித்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உள்நாட்டு வீரர்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் போட்டி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கு அவர்கள் எப்போதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை கடந்த ஆண்டு நடத்தப்படாததால் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.