துரை

திடீர் உடல்நலக் குறைவால் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்கை அமரன் தமிழில் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் 1979 ஆம் ஆண்டு இசைமையப்பாளராக திரைத் துறையில் அறிமுகம் ஆனார். பிறகு கோழிக் கூவுது படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக அறிமுகமானார். அவர் பல படங்களுக்கு பாடல்களை எழுதியதுடன், பாடல்களையும் பாடியுள்ளார்.

சுமார் 77 வயதாகும் கங்கை அமரன் நடித்து வரும், புதிய படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை சிற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துகொண்டிருந்தது.  அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

எனவே அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்போது கங்கை அமரன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்