நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கணேஷ் வெங்கட்ராமன் நிஷா தம்பதியினர் சற்று பிரபலமானவர்களாகினர்.
ராதா மோகனின் ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன் . நிஷா தமிழ் தொகுப்பாளினி.
இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்கள் வீட்டில் புதுவரவை வரவேற்கவிருக்கிறோம். நிஷாவிற்கு பாரம்பரிய முறையில் சீமந்தம் நடைபெற்றது. வாழ்க்கையின் தந்தை என்கிற ஸ்தானத்தை அடைய எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்று தெரிவித்தள்ளார்.