டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை பத்திரமாக அகற்றப்பட்டு, மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதனால், இதை இடித்து விட்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மோடி தலைமையிலான அரச முடிவு செய்து, அதற்கான அடிக்கல்லும் 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடைபெற்றது.
அதையடுத்து கட்டிடப்பணிகள் தொடங்கி உள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம், 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை அகற்றப்பட்டு, மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுமானத்திற்கு இடையூராக இருந்தால், தற்காலிகமாக காந்தி சிலை அகற்றப்பட்டு இருப்பதாகவும், பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதும் சரியான இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் கட்டும்பணி 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
புதிய கட்டிடத்தில், மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும். மேலும், பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இ அத்துடன் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.