உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஞாயிறன்று நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏறி நான்கு பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் அந்த நான்கு பேர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இதனை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதுடன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
Full Video of #LakhimpurKheriViolence.. pic.twitter.com/oBTvp62kQV
— Shashi S Singh 🇮🇳 (@Morewithshashi) October 6, 2021
விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா-வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான முழு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.