சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய 6வது கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படு இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என்றும், நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.