புதுச்சேரி:
மே-31 வரை முழு ஊரடங்கு நீடிப்பு புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைய தொடங்கி உள்ளது. மேலும் காய்கறி, மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.