லண்டன் :
இந்தியாவிலிருந்து தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லய்யா, இன்று இரண்டாவது முறையாக லண்டன் நீதி மன்றத்தில் ஆஜரானார்.
லண்டன் நீதிமன்றத்தில் அவரை நாடுகடத்த உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்தி பரிந்துரைக்கப்பட்ட நிலையில்,. நேற்று அவரது வழக்கறிஞர் மற்றும் அவரது தோழியான முன்னாள் கிங்பிஷர் விமான பணிப்பெண் பிங்கி லால்வானி-யுடன் ஆஜரான விஜய் மல்லையா.
செய்தியாளர்கள் கண்ணில்படமால், நீதிமன்றத்தின் மற்றொரு வாயில்வழியாக உள்ளே சென்றார், அவரது வழக்கறிஞர் கிளேர் மாண்ட்கோமெரி, அவரை நாடுகடத்த பரிந்துரைத்த தலைமை நீதிபதி எம்மா அர்பூட்நாட்டின் தீர்ப்பை கிழித்தெறிந்தார், மேலும் இந்த தீர்ப்பில், நீதிபதி முக்கியமான ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டு புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய விஜய் மல்லையா செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் சென்றார்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வந்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைக்கு பின் அவர் இந்தியா திருப்பி அனுப்பப்படுவாரா என்பது தெரியவரும்.