மும்பை

ர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்ததில் இருந்தே விலை மிகவும் உயர்ந்து வருகிறது.  இடையில் கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் பெட்ரோல், டிசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.   தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையினாலும் விலை உயர்வு மிகவும் கடுமையாக உள்ளது.

கர்நாடக தேர்தல் முடிந்து இதுவரை 12 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்றம் உண்டாகி உள்ளது.   மும்பையில் தேர்தலுக்குப் பிறகு 12 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.02 ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.27 ம் உயர்ந்துள்ளது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.  இன்று மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.64 ஆகவும் டீசல் விலை லிட்டருக்க் ரூ.73.20 ஆகவும் உள்ளது.