சென்னை: எரிபொருள் சிக்கனம் தொடர்பாக, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்புக்காக 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், எரிபொருள் சிக்கனத்திற்காக, அது 4ஆக குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் விடுத்த அறிவுறுத்தலை ஏற்று வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில், நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஈரான் போர்ப் பதற்றம் போன்ற சில காரணங்களால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனையடுத்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, ஆளுநர் ஆர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் செல்லும்போது 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தமிழ்நாட்டு ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.‘
முன்னதாக பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அணிவகுப்பில் பங்குபெறும் வாகனங்களில் 50 சதவிகித வாகனங்களைக் குறைக்குமாறும், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பெருமளவில் பயன்படுத்துமாறு சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]