பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI கடந்த வாரம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் வாங்குவதாக இன்று அறிவித்துள்ளது.

A1 மற்றும் A2 பாலில் பீட்டா-கேசீன் புரதத்தின் கட்டமைப்பு வேறுபடுவதாக உணவு வணிக நிறுவனங்கள் தங்கள் பால் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது குறிப்பிடுகின்றன.

A1 மற்றும் A2 பால் அவற்றின் பீட்டா-கேசீன் புரத கலவையில் வேறுபடுகின்றன என்றபோதும் இது மாட்டு இனம் மற்றும் ரகத்தின் அடிப்படையில் மாறுபடும் என்று FSSAI அதிகாரிகள், தெரிவித்தனர்.

FSSAIன் இந்த முடிவுக்கு கால்நடை நிபுணரும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) ஆளும் குழு உறுப்பினருமான வேணுகோபால் படரவாடா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு FSSAI ஐக் கோருமாறும், சிக்கலை மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்குமாறும் பதராவாடா வலியுறுத்தினார்.

இதனையடுத்து பால் பொருட்கள் மீதான A1 – A2 என்று முத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை FSSAI வாபஸ் வாங்கியுள்ளது.

பால் பாக்கெட் மீது A1 – A2 என்று முத்திரையிடக்கூடாது என்று FBOக்களுக்கு FSSAI உத்தரவு…