நாகர்கோவில்

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் செல்லும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நாளை முதல் இணைக்கப்படுகின்றன.

இன்று தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் ஒரு செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   அதில், “ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி மீண்டும் வழங்கப்படுகிறது.

இதையொட்டி வரும் மார்ச் 16ம் தேதி முதல் ரயில் எண்: 22657 தாம்பரம்- நாகர்கோவில் சந்திப்பு வாரம் மூன்று முறை சூப்பர் பாஸ்ட் ரயில், ரயில் எண்: 22658 நாகர்கோவில் சந்திப்பு- தாம்பரம் வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் ரயில் (நாகர்கோவிலில் இருந்து மார்ச் 17 புறப்படுவது) ஆகியவற்றில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படுகிறது.

ரயில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களி்ல இருந்து பெற்றுக்கொள்ளலாம். அடுத்தகட்டமாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் மார்ச் 20, ஏப்ரல் 1, 16, 20, மற்றும் மே 1ம் தேதி முதல் மேலும் சில ரயில்களில் இணைக்கப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.