மும்பை

நாளை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலாகிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இங்கு இது வரை 18.96 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.  தற்போது சுமார் 63 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.   மகாராஷ்டிர மாநிலம் அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவுதலைத் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இன்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இது குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.  அப்போது மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மாநிலம் எங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அடுத்த அறிவிப்பு வரும் வரை இது தொடர உள்ளது.  இதைத் தவிர ஐரோப்பா, மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் அரசு விடுதிகளில் தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.