சென்னை

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நாளை முதல் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.

”சென்னையில் இருந்து வார விடுமுறை, மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

தற்போது வார விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் மிலாடி நபி விடுமுறை ஆகிய தொடர் விடுமுறைகள் வர உள்ளதால், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை முதல் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை 190 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், பெங்களூரு, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.