வுகான்

நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது.

வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது.

இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றிலிருந்து சீனா முழுமையாக விடுபட்டுள்ளது.

அதையொட்டி இன்று அதிகாலை 0.00 மணி அதாவது நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.

வுகான் நகரில் 12 மணி அடித்ததும் விளக்குகளை எரிய விட்டு மக்கள் மகிழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வு வீடியோ பதிவு ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :

[youtube https://www.youtube.com/watch?v=dKr9sObW-VY]