சண்டிகர்
இன்று முதல் அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கடந்த 5 ஆம் தேதி நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக அபார வெற்றி பெற்றது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. என்அவே 2 ஆம் முறையாக, அரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
பாஜகவின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று அரியானா அரசு இன்று அறிவித்துள்ளது.
அம்மாநில முதல்வ நயாப் சிங் சைனி, செய்தியாளர்களிடம்,
”முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து, சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது. அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, அரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.”
என தெரிவித்துள்ளார்.
Haryana, From today, free dialysis,