சென்னை

ன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அவ்வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்கின்றன.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.