சென்னை
இன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயத்தப்படுகிறது.
ஏற்கெனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கிறது. அதன்படி தற்போது வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று முதல் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று முதல் வணிக சிலிண்டர் விலை 1,855 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் வணிக சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ7.50 உயர்ந்த நிலையில், இன்று ரூ30 உயர்ந்துள்ளது. அதே வேளையில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.