புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானம் அருந்தும் பார்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை அக்டோபர் 15 முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த மார்ச் 25 முதல் கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.  அதன்பிறகு ஒவ்வொரு கட்டமாகத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்திய மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகள் மாநிலங்களின் நிலையைப் பொறுத்துத் தளர்வுகளை திட்டமிடலாம் என் தெரிவித்துள்ளது.  தற்போது அக்டோபர் 31 வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புதுச்சேரி மாநில அரசு தளர்வுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை அமல் படுத்தி உள்ளது.  அதன்படி இந்த மாதம் 5 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கு வகுப்புக்கள் தொடங்க உள்ளது.   பாடத்தில் சந்தேகம் உள்ள மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.  9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கு ௧௨ ஆம் தேதி  முதல் வ்குப்புக்கள் தொடங்குகின்றன.

திரையரங்குகளை அக்டோபர் 15 முதல் 50% பார்வையாளர்களுடன் இயக்க அனும்திக்கபட்டுள்ளது.  சுற்றுலாத்தலங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை 15 ஆம் தேதி முதல் திறக்கலாம்.  கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் காலை 6 முதல் இரவு 9 வரை திறக்கலாம்.  உணவகங்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம்.  பார்சலுக்கு இரவு 10 மணி வரை அனுமதி உண்டு.

கலால் விதி முறைகளின்படி மதுபானக்கடைகள் மற்றும் பார்களுக்கு இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் சாலைகளில் ந்டைபயிற்சி செய்வோருக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.