ஜூலை முதல் ஜிஎஸ்டி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி

Must read

டில்லி,

ரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மாநிங்கள் கோரி 26 மாற்றங்களையும் ஏற்பதாக அருண்ஜேட்லி கூறினார்.

அதைத்தொடர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்  இறுதி ஒப்புதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அதன் காரணமாக இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அருண்ஜேட்லி கூறியதாவது,

 

ஜிஎஸ்டி மசோதாவில் மொத்தம் 26 வகையான திருத்தங்களை மாநில அரசுகள் சுட்டிக் காட்டின. அவற்றை திருத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுதான் கூட்டாட்சி அமைப்பின் மிகப் பெரிய பலமாகும்.

சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி குறித்து அடுத்த கட்ட விவாதம் நடைபெறும். அடுத்த கூட்டம் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்,’’ என்று மேற்கு வங்கத்தின் நிதி அமைச்சர் அமித் மித்ரா குறிப்பிட்டார்.

சாலையோர உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரென்டுகளுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுங்கள் ஒப்புக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

சாலையோர உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரென்டுகள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் வரும். இதன்படி சிறிய வர்த்தகர்கள் 5 சதவீத வரி (இதை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பகிர்ந்து கொள்ளும்) விதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று மித்ரா கூறினார்.

சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு மாநில அரசுகள் ஒப்புக் கொண்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.

ரியல் எஸ்டேட் துறையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும். இத்துறையில்தான் அதிக அளவிலான கறுப்புப் பணம் புழங்குவது அனைவருக்கும் தெரியும்.

இத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிசோடியா கூறினார்.

சட்ட வரைவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இது சட்ட அமைச்சகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிதி அமைச்சர் ஹசீப் டிராபு கூறினார்.

கடந்த மாதம் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் நான்கு நிலை அதாவது 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் உச்சபட்ச அளவு 40 சதவீதம் என சனிக்கிழமை ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஜேட்லி கூறினார்.

சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்சி மற்றும் யுடி-ஜிஎஸ்டி சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வைக்கப்பட உள்ளது.  இம்மாதம் 9-ம் தேதி தொடங்கும் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி இறுதி செய்யப்படும்.

இதையடுத்து வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

More articles

Latest article